செய்திகள்

14. வைணவ உரையறிஞர் பேராசிரியர் பு.ரா.புருஷோத்தம நாயுடு நூற்றாண்டு விழாச் சிறப்புக் கருத்தரங்கம் தமிழ் வைணவ உரை மரபுகள் (28.03.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை மற்றும் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் – தமிழ்த்துறை இணைந்து வைணவ உரையறிஞர் பேராசிரியர் பு.ரா.புருஷோத்தம நாயுடு நூற்றாண்டு விழாச் சிறப்புக் கருத்தரங்கம் ‘தமிழ் வைணவ உரை மரபுகள்’ எனும் தலைப்பில் 28.03.2017 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க விழாவில் பேராசிரியர் பா.ஆனந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். காந்தி கிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் துணைவேந்தருமான சு.நடராசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், பேராசிரியர் வ.இராசரத்தினம், பு.ரா.பு.நப்பின்னை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.