செய்திகள்

நூல் அரங்கேற்றம் – 6 (26.04.2018) அன்று ‘தமிழக அரசின் கம்பர் விருது பெற்ற சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நூல் அரங்கேற்ற விழா’

‘தமிழக அரசின் கம்பர் விருது பெற்ற சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நூல் அரங்கேற்ற விழா’ 26.04.2018 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. புலவர் வா.சாவித்திரி பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘கந்தர்வன் காலடித்தடங்கள்’ ஆய்வு நூலிற்கும் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் அவர்கள் ‘தமிழகக் கோயில்கலை வரலாறு’ ஆய்வு நூலிற்கும் நூல் மதிப்புரை வழங்கினர். அம்பை மணிவண்ணன் அவர்கள் ‘தமிழகக் கோவில்கலை வரலாறு’ என்ற தனது நூலிற்கும் புலவர் சங்கரலிங்கம் அவர்கள் ‘கந்தர்வன் காலடித்தடங்கள்’ நூலிற்கும் ஏற்புரையாற்றினர். ‘சீர்மேவும் சேக்கிழார்’ நூலினை விளக்கி தி.அருணாசலனார்  தனது ஏற்புரையாற்றினார். ‘எங்கே போனாய் தமிழினமே’ கவிதை நூலிற்கு திரு.கு.ஹரிகரன் அவர்களும் ‘இருபுறக்கருக்குள்ள பட்டயம்’ கவிதை நூலிற்கான ஏற்புரையை திரு.அ.கணேசன் அவர்களும் ‘ஒத்தையடிப்பாதை’ கவிதை நூலிற்கான ஏற்புரையை திரு.கவி முத்து அவர்களும் வழங்கினர்.