செய்திகள்

உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்

2018 ஆம் ஆண்டிற்கான அயலகத் தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 19.02.2019 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த திரு.வி. ஜீவகுமாரன் அவர்களுக்கும் இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாட்டரசர் கி. பாரதிதாசன் அவர்களுக்கும் மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ச. சச்சிதானந்தம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.