எட்டாவது உலகத் தமிழ் மாநாடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1995ஆம் ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சனவரித் திங்கள் 1ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை தஞ்சாவூரில் நடத்தினார்கள்.

உலகமெங்கும் வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியோடு இயைந்து தமிழ்மொழி பொலிவு பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான்காம் தமிழாக ‘அறிவியல் தமிழ்’ இருக்கும் என மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்தார்கள்.

‘இன்றும் தமிழ் என்றும் தமிழ்’ என்ற புதிய முழக்கத்தை இந்த மாநாட்டின் எழுச்சி முழக்கமாக அறிவிப்பதில் நான் பெருமிதமும் பேருவகையும் அடைகிறேன்” எனவும் குறிப்பிட்டார்.

உலக தமிழ் மாநாடுகள்

இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் வாழ்த்துச் செய்தியையும் ‘வளரும் தமிழ்’ கட்டுரையையும் ‘கட்டுரைகள்’ தலைப்பின் கீழ்க் காணலாம்.