செய்திகள்

ஆய்வரங்கம் – 7 மலையகத் தமிழ் இலக்கியம் 11.09.2017

11.09.2017 அன்று முற்பகல் 11.30 மணிக்கு ‘மலையகத் தமிழ் இலக்கியம்’ எனும் ஆய்வரங்க நிகழ்வில், ஆசுதிரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தமிழ்த்திரு. மாத்தளை சோமு அவர்கள், ‘மலையகத் தமிழ் இலக்கியம்’ குறித்து தொடக்கவுரை ஆற்றினார். ‘சிறுகதை நாவல் பரவலான இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் தெளிவத்தை ஜோசப் அவர்களும் ‘மலையக நாட்டார் பாடல் இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் திரு.மு.சிவலிங்கம் அவர்களும் ‘மலையகக் கவிதை இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்பு சந்தி திலகர் அவர்களும் ‘மலையக நாடக அரங்கியல்’ எனும் தலைப்பில் அ.இலட்சுமணன் அவர்களும் ஆய்வுரை நிகழ்த்தினர். இந்நிகழ்வினைத் தொடர்ந்து மாமதுரைக் கவிதைப் பேரவையினரின் கவிதைப் படைப்புகளும் நிகழ்த்தப்பட்டன.