செய்திகள்

ஆய்வரங்கம் – 12 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 18.09.2018 அன்று ‘மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கலையரங்கில் நடைபெற்றது

18.09.2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற இந்த ஆய்வரங்க நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் விழாப் பேருரையாற்றினார். மதுரை மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர்கோ.விசயராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, மலேசிய நண்பன் நாளிதழின் செய்தியாளர், கவிஞர் திரு.ந.கு.முல்லைச்செல்வன் அவர்கள், ‘மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை’ என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.